உத்தரவு! அஜித் குமார் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ. 25 லட்சம்! - மதுரை உயர்நீதிமன்றம் - Seithipunal
Seithipunal


சிவகங்கை திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி 27 வயதான அஜித்குமார் என்பவர் திருட்டு புகார் தொடர்பாக காவலர்களால் கொடூரமாக தாக்கி lock up -ல் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 காவலர்களை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதன் நடுவே,இன்று அஜித்குமார் கொலை வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடைபெற்றது.

அச்சமயம், அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தி நீதிபதிகள் வழக்கில் நீதிமன்ற உத்தரவை அரசு முறையாக நிறைவேற்றி வருவதாகவும், அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Order Interim compensation of Rs 25 lakhs to Ajith Kumars family Madurai High Court


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->