#BREAKING : மக்களே உஷார்.. தமிழகத்திற்கு 'ஆரஞ்ச் அலர்ட்'.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Orange Alert for Tamil Nadu India Meteorological Department Warning
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிற இன்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
அதன் பிறகு மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8ம் தேதி காலை வட தமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் வந்தடைய கூடும். இன்றும், நாளையும் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07/12/2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓர் இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
08/12/2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அந்த வகையில் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும், தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Orange Alert for Tamil Nadu India Meteorological Department Warning