03 நாள் பயணம்; அடுத்த வாரம் ஜோர்டான் உள்பட மூன்று நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி..!
Prime Minister Modi to visit 3 countries including Jordan next week
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மன்னர் 02-ஆம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று டிசம்பர் 15-ஆம் தேதி மோடி ஜோர்டான் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின் போது ஜோர்டான் நாட்டு மன்னருடன் இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
அதனை தொடந்து 16-ஆம் தேதி, ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு பயணம் செல்கிறார். பிரதமர் மோடி, எத்தியோப்பியாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அங்கு அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலியைச் சந்தித்து பேசவுள்ளார்.

அப்போது இந்தியா-எத்தியோப்பியா இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துள்ளதோடு, சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக 17-ஆம் தேதி ஓமன் நாட்டிற்கு செல்கிறார். அந்நாட்டிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ள இருக்கும் 02-வது சுற்றுப்பயணம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின்போது இந்தியா-ஓமன் இடையிலான வர்த்தகம், முதலீடுகள், இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Prime Minister Modi to visit 3 countries including Jordan next week