ஒரே முகவரியில் 45 போலி நிறுவனங்கள்; சிக்கிய கோவா இரவு விடுதி உரிமையாளர்கள்..!
Goa nightclub owners have started 45 fake companies at the same address
கடந்த 06-ஆம் தேதி நள்ளிரவு, கோவாவின் வடக்குப் பகுதியில் உள்ள அர்போரா பகுதியில் இயங்கி வந்த 'பிரச் பை ரோமியோ லைன்' இரவு விடுதியில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நடந்தவுடன் அந்த விடுதி உரிமையாளர்களான கவுரவ் லூத்ரா மற்றும் சவுரப் லூத்ரா சகோதரர்கள் ஆகியோர் தாய்லாந்துக்கு தப்பியோடினர்.
பாங்காக் சென்ற இந்திய அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ள நிலையில் அவர்களை இந்தியா அழைத்து வருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அத்துடன், அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கோவாவில் அவர்களுக்கு சொந்தமாக இருந்த மற்றொரு விடுதியை அம்மாநில முதல்வரின் உத்தரவின் பேரில்அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

கவுரவ் லூத்ரா மற்றும் சவுரப் லூத்ரா சகோதரர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 'ரோமியோ லேன்' என்ற பெயரில் விடுதிகளை நடத்தி வருகின்றனர். கோவாவில் நடந்த தீவிபத்தைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அவர்கள் ஒரே முகவரியில் 42 போலி நிறுவனங்களை தொடங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர்களுக்கு கிடைத்த நிதி மற்றும் அவர்களின் தொழில் குறித்து நம்பகத்தன்மை கேள்வி எழுந்துள்ளது.
இந்த போலி நிறுவனத்துக்கு அவர்கள் இருவருமே இயக்குநர்களாக உள்ளனர். அந்த நிறுவனங்களானது 2590, கீழ் தளம், ஹட்சன்லைன், வடமேற்கு டில்லி. என்ற முகவரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாய்லாந்து சென்று வந்தாலும் அவர்களின் நிறுவனங்களுக்கு என வெளிநாடுகளில் எந்த செயல்பாடும் இல்லை. பயனாளர்கள் மற்றும் அவர்களின் ஆலோசனை என ஏதும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. சேவைத்துறையை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் மூலம் அவர்கள் நிதி மோசடி, பண மோசடி செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
English Summary
Goa nightclub owners have started 45 fake companies at the same address