தேஜ கூட்டணி எம்பிக்களுக்கு விருந்து; 'நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவோம்' பிரதமர் மோடி உறுதி..!
Prime Minister Modi hosted a dinner for National Janata Alliance MPs
தேஜ கூட்டணி எம்பிக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) விருந்தளித்தார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், ஆளுங்கட்சியின் வியூகத்தை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, கூட்டணி கட்சிகள் இடையே கருத்துக்களை திறந்த மனதுடனும், ஆக்கப்பூர்வமாக பரிமாறிக்கொள்ளும் நோக்கத்துடனும், அரசின் சட்டங்கள், அரசின் செயல்பாடுகள் குறித்து எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இந்த விருந்து உபச்சாரத்தில் மூத்த அமைச்சர்கள், பாராளுமன்ற கட்சி தலைவர்கள், எம்பிக்கள் என பலரும் பங்கேற்றனர். இதன்போது வரவிருக்கும் தமிழகம், அசாம், மேற்கு வங்க ஆகிய சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவும், வியூகம் வகுக்கவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
குறித்த விருந்துக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தேஜ கூட்டணி எம்பிக்களுக்கு விருந்து அளித்தது மகிழ்ச்சி. நல்லாட்சி, தேசிய வளர்ச்சி மற்றும் பிராந்திய விருப்பங்கள் மீதான ஒரு பகிரப்பட்ட அர்ப்பணிப்பை தேஜ கூட்டணி பிரதிபலிக்கிறது. வரும் ஆண்டுகளில் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்த அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்.'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Prime Minister Modi hosted a dinner for National Janata Alliance MPs