5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை!
Orange alert for 5 districts Weather center warning
காசர்கோடு, கண்ணூர், திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பெய்ய தொடங்கியது.இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் ,திண்டுக்கல், கன்னியாகுமரி ,நெல்லை, பாபநாசம்,, தென்காசி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து பெய்தது, இந்த மழையானது தொடர்ந்து கேரளாவில் பெய்து வந்ததால் அதன் தாக்கம் தமிழகத்திலும் காணப்பட்டது ,
மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது சென்னையில் அவ்வப்போது மழை பெய்து மக்களை குளிர்வித்தது குறிப்பாக சில வாரங்களில் அதிகமான வெப்பநிலையும் காணப்பட்டது .இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஓரிரு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருச்சூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 20-ந்தேதி வரை கேரளாவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காசர்கோடு, கண்ணூர், திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கக்கடலில் காற்றின் வேகம் சுமார் 65 கி.மீ. வரை அதிகரிக்கக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Orange alert for 5 districts Weather center warning