வேதனையுடன் தமிழக அரசிற்கு முக்கிய வேண்டுகோள் வைத்த ஓபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்‌ காவல்‌ துறையிவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில்‌ நிலவுவது மிகுந்த வேதனைக்குரியது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம்‌, நவல்பட்டு காவல்‌ நிலையத்தில்‌ காவல்‌ சார்‌ ஆய்வாளராக பணிபுரிந்து வரும்‌ திரு. பூமிநாதன்‌ அவர்கள்‌ சமூக விரோதிகளை பிடிக்க இரு சக்கர வாகனத்தில்‌ விரட்டிச்‌ சென்று, புதுக்கோட்டை மாவட்டம்‌ கீரனூர்‌ அருகே மடக்கி பிடித்தபோது, அவர்களுடன்‌ ஏற்பட்ட தசராறில்‌, அந்தக்‌ கும்பல்‌ காவல்‌ துறை சார்‌ ஆய்வாளரை அறிவாளால்‌ சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத்‌ துயரமும்‌ மிகுந்த மனவேதனையும்‌ அடைந்தேன்‌, இக்கொடிய சம்பவத்தால்‌ உயிரிழந்த திரு. பூமிநாதனுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவரை இழந்து வாடும்‌ அவாது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தினையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்‌ காவல்‌ துறையிவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில்‌ நிலவுவது மிகுந்த வேதனைக்குரியது. இக்கொடூர செயலைச்‌ செய்தவர்களை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின்‌ முன்நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுக்‌ கொடுக்க வேண்டும்‌ என்றும்‌, இதுபோன்ற கடினமான பணிகளில்‌ ஈடுபடும்‌ காவல்‌ துறையினரின்‌ பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்‌, இனி வருங்காலங்களில்‌ இதுபோன்ற கொடூரச்‌ செயல்கள்‌ நடைபெறா வண்ணம்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்றும்‌ தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள்‌
விடுக்கிறேன்‌ என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ops statement for sc murder


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->