மீண்டும் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்.!  - Seithipunal
Seithipunal


மீண்டும் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்.! 

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. 

அந்த விசாரணையின் போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், "கடந்த 2022 ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் நியமனத்தை பதிவு செய்து, பாராட்டு தெரிவிக்கும் வகையிலேயே தீர்மானங்கள் முன்வைக்கப்பட இருந்தது. 

அந்த தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரின் தவிகள் காலாவதியாகி விட்டதாக எப்படி கூற முடியும். இத்தனை கொள்ளாமல் தனி நீதிபதியும் உத்தரவு பிறப்பித்துவிட்டார்.

அதிமுகவின் பொதுக்குழு மூலம் தற்போது பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கட்சி விதிகளுக்கு எதிரானது. உள்கட்சி ஜனநாயகத்துக்கு விரோதமாக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றது தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதி இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops side arguments on high court againsts eps general secretary case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->