தேனியில் அரங்கேறிய கொடூரம் - மன வேதனையில் ஓபிஎஸ்.!
ops say about oodaipatti little girl death
தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"தேனி மாவட்டம், ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பூங்காக்கள் அமைப்பதற்காக வெகு நாட்களுக்கு முன்பு தோண்டப்பட்ட குழி மூடப்படாததன் காரணமாக, கழிவறை வசதி இல்லாததால், இயற்கை உபாதைக்கு அங்கு சென்ற சிறுமி ஹாசினி மழைநீர் நிரம்பியிருந்த குழியில் தவறி விழுந்து உஉயிரிழந்த செய்தியறிந்து, ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுமியின் உயிரிழப்புக்கு பேரூராட்சி நிர்வாகமே காரணம் என்பதால், உயிரிழந்த சிறுமி ஹாசினியின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும்.
அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்குமாறும், இதுபோன்ற சம்பவம் இனி நடக்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
ops say about oodaipatti little girl death