ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரனை! நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ்.ஆஜர்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த பொழுது சசிகலா தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாக கூறி ஒ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை நடத்தினார். 

பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பின் ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையின் பேரில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், 90 விழுக்காடு விசாரணை நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக இதுவரை 8 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் ஆஜராக முடியவில்லை. இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

முன்னதாக சசிகலா உறவினர் இளவரசியும் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS appearing in enquiry commission


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->