கிளாட் நுழைவுத் தேர்வு எழுத விண்னப்பிக்க அவகாசம்!  - Seithipunal
Seithipunal


சட்டப்படிப்புகளுக்காக நடத்தப்படும் கிளாட் நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வில் பங்கேற்க அக்டோபர் 31ம் தேதிக்குள் /consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 25 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேருவதற்கு கிளாட் எனும் பொது சட்ட நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்தநிலையில் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் 2026-27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கிளாட் நுழைவுத் தேர்வுக்கு அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.  2026-27 ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கிளாட் நுழைவுத்தேர்வு டிசம்பர் 7-ம் தேதி மதியம் 2 முதல் 4 மணி வரை நடை பெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளதையடுத்து விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க அக்டோபர் 31ம் தேதிக்குள் /consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு  ரூ.4000 ம், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு  ரூ.3500 ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்பட கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Opportunity to take the entrance exam for CLAT


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->