குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆன்–லைன் சிறப்பு முகாம்.. குடிமைப் பொருள் வழங்கல் துறை ஏற்பாடு!
Online special camp for family cardholders Organized by the department of public distribution
வில்லியனூர் தொகுதியில் குடும்ப அட்டைதாரர்கள் ஆன்–லைன் மூலம் சரிபாக்கும் சிறப்பு முகாமை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் .
புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தலின்படி, வில்லியனூர் தொகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களையும் ஆன்–லைன் மூலம் (eKYC) சரிபார்க்க பொது சேவை மையத்தை அணுக அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதிக குடும்ப உறுப்பினர்களை கொண்ட வில்லியனூர் தொகுதி மக்களுக்கு சிரமமின்றி குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை ஆன்–லைன் மூலம் சரிபார்ப்பதற்காக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. சிவா அவர்கள் இரண்டு நாள் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி, வில்லியனூர் திருக்காமீஸ்வரர் எதிரில் உள்ள வாணியர் திருமண நிலையத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் சிறப்பு முகாமை இன்று காலை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார். முகாமில் வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர்.
இதில், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ராமன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், விவசாய அணி துணை அமைப்பாளர் கோபி, ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காலி, தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன். கிளைக் கழக நிர்வாகிகள் ராஜி, கலியபெருமாள், மிலிட்டரி முருகன், கார்த்திகேயன், கமால் பாஷா, காசிநாதன், கோவிந்தராஜ், முருகேசன், தர்ஷனா, பாலகுரு, ராஜேந்திரன், ரகு, சக்தி, முத்து, சந்தோஷ், ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
Online special camp for family cardholders Organized by the department of public distribution