இலங்கைக்கு கடத்த இருந்த ஐம்பொன் விஷ்ணு சிலை - கையும் களவுமாக பிடிபட்ட 2 பேர்.!!
2 peoples arrested for imbon vishnu statue kidnape in thoothukudi
தூத்துக்குடி மாவட்டம் கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறைக்கு தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஐம்பொன் சிலை கடத்தப்படுவதாக தகவல் வந்தது. அந்தத் தகவலின் படி கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று மாலை திரேஸ்புரம் மற்றும் அண்ணா காலனியில் ரோந்து பணிக்கு சென்றனர்.

அப்போது அந்தப் பகுதியில் சிலர் சந்தேகப்படும் வகையில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் நடத்தப்பட்ட சோதனையில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பழங்காலத்து ஐம்பொன் விஷ்ணு சிலையை கைப்பற்றி கடத்தலில் ஈடுபட இருந்த 2 பேரை கைது செய்து மேல் விசாரணைக்காக தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது, ஐம்பொன் சிலைகள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட அந்த சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என்று தெரிய வருகிறது.
English Summary
2 peoples arrested for imbon vishnu statue kidnape in thoothukudi