இணையவழி மோசடி..ஒரு கோடி ரூபாய் சுருட்டிய வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்! - Seithipunal
Seithipunal


கஸ்டம்மஸில் பிடிபடுகின்ற பொருட்களை குறைந்த விலைக்கு கொடுக்கிறேன் என்று வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் , ஆன்லைன் மூலமாக  ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த அப்துல் ஷாகித் என்ற நபரை புதுச்சேரி இணையவழி போலீசார் கைது செய்தனர்.

‘ஹலோ சார்.. ஹலோ மேடம்.. ஒரு 2 நிமிஷம் பேசலாமா?’ என்ற அழைப்பு, நம்மில் பலரது மொபைல் போனுக்கும் நிச்சயமாக வந்திருக்கும். இவ்வாறு அழைக்கும் நபர்கள், குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடன் வாங்கித் தருகிறோம். பகுதி நேர வேலை வாய்ப்புகள் உள்ளன; வீட்டில் இருந்தபடியே அதிகளவில் சம்பாதிக்கலாம். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருகிறோம் என்றெல்லாம் படபட என்று பேசுவார்கள்.

அவசர தேவைக்காக அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டால், அதுதொடர்பான தகவல்களும் அடுத்த சில நிமிடங்களில் உங்கள் மொபைல் போனை வந்தடையும். பதமாக பேசி, இதமாக காய் நகர்த்தும் இவர்கள், சம்பந்தப்பட்ட நபரின் வேலை, ஊதியம், குடும்பம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்திருப்பார்கள். அவர்களின் பேச்சை நம்பி, ‘ஆன்லைன் ஜாப்’, உடனடி கடனுதவி, வெளிநாட்டு வேலை என்றுசிக்கி, பணத்தைஇழந்து வருவோர் புதுச்சேரியில் அதிகமாகி வருகின்றனர்.

அந்தவகையில் கஸ்டம்மஸில் பிடிபடுகின்ற பொருட்களை குறைந்த விலைக்கு கொடுக்கிறேன் என்று வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் , ஆன்லைன் மூலமாக  ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த அப்துல் ஷாகித் என்ற நபரை புதுச்சேரி இணையவழி போலீசார் கைது செய்தனர்.

இவர் செல்போன் டிவி பிரிட்ஜ் வாஷிங் மெஷின்  படங்களை அனுப்பி மற்றும் வெளிநாட்டில் நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்று இருபதுக்கும் மேற்பட்ட நபர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார்.மோசடி செய்தவன்  கோட்டகுப்பத்தைச் சார்ந்த அப்துல் ஷாகித் என்ற நபரை புதுச்சேரி இணையவழி போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online fraud Police arrest man for stealing Rs 1 crore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->