ரேஷன் கடைல வெங்காய விற்பனையா.?! அமைச்சர் புதிய தகவல்.!  - Seithipunal
Seithipunal


உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாருரில் செய்தியாளர்கள் சந்திப்பில், "வெங்காய விலை உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஐந்தாயிரம் ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெங்காயம் விற்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது." என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, "வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்யும். இதன் காரணமாக வெங்காய விலை சற்று அதிகரித்து இருக்கும். அதனடிப்படையில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு அதிகப்படியான மழை பெய்ததால் வெங்காயம் அழுகி போகின்றது. இதனால்தான் தற்காலிக விலை ஏற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

Image result for onion seithipunal

இந்த விலை ஏற்றம் நிரந்தரம் இல்லை. இருப்பினும் ஓரிரு மாதங்களில் விலை ஏற்றத்தை சமாளிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவுப்படி பண்ணைப் பசுமை கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் வெங்காயத்தை மானிய விலையில் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றோம்.

மத்திய அரசை பொறுத்தவரை, பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் 13-ஆம் தேதிக்குள் தமிழகத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வெங்காயம் வந்தவுடன் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. தற்காலிகமான விலையேற்றம் தான் என்றாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது." என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ONION IN RATION SHOP TAMILNADU


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->