சென்னையில் மேலும் ஒரு விசாரணை கைதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை | காவலர்கள் தாக்கியதில் ஒன்பது நாளாக சிகிச்சையில் இருந்த விசாரணை கைதி உயிரிழப்பு!

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் கடந்த 21ம் தேதி ஆகாஷ் என்பவர் குடித்துவிட்டு ரகளை ஈடுபட்டுள்ளார். 

அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி காவலர் மணிகண்டன் என்பவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதியை காவலர்கள் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அன்று இரவு கை கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயங்களுடன் சுய நினைவு இழந்த நிலையில் பெற்றோரிடம் ஆகாஷை காவலர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஆகாஷை சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

கடந்த 21 ஆம் தேதி முதல் 9 நாட்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆகாஷ் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயர்ந்த உள்ளார். காவலர்கள் தாக்கியதால் ஆகாஷ் உயர்ந்துள்ளார். அவரின் உயிரிழப்புக்கு ஓட்டேரி காவல் நிலையத்தைச் சார்ந்த காவலர்களை காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One more inmate in Chennai died in the hospital with treatment


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->