தனி மாநில அந்தஸ்து - புதுச்சேரியில் ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் தொடக்கம்.!!
one lakhs signature campaign start in puthuchery for separate state
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டசபையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரைக்கும் மத்திய அரசு வழங்கவில்லை.
இந்த நிலையில் உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் பொது நல அமைப்புகள் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி ஒரு லட்சம் கையெழுத்துகளை பெற்று மத்திய அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்கான கையெழுத்து இயக்கத்தை சட்டசபையில் நேரு எம்.எல்.ஏ. தொடங்கினார்.
அதன் படி முதலமைச்சர் ரங்கசாமியிடம் முதல் கையெழுத்து கையெழுத்திட்டார். தொடர்ந்து ஒருலட்சம் கையெழுத்து வாங்குவதற்கான நடைமுறை ஆரம்பமானது.
English Summary
one lakhs signature campaign start in puthuchery for separate state