காமராஜர் பிறந்தநாள்: த.வெ.க. நிர்வாகிகளுக்கு என்.ஆனந்த் போட்டுள்ள உத்தரவு..!
On the occasion of Kamaraj birthday N Anand has given orders to the TVK executives
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை காமராஜரின் திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, தவெக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
'தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் தலைவர் உத்தரவின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து, நாளை (15.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும் திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.' என்று த.வெ.க. பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
On the occasion of Kamaraj birthday N Anand has given orders to the TVK executives