தேனி: இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
Oldman dies after falling from twowheeler in theni
தேனி மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயசூரியன். இவர் இருசக்கர வாகனத்தில் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த உதயசூரியனை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதயசூரியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Oldman dies after falling from twowheeler in theni