முதியவரிடம் ஆபாச பேச்சு.! தெரு நாயை கட்டையால் அடித்தவரை தட்டிக்கேட்டதால் தாக்குதல்.!  - Seithipunal
Seithipunal


சென்னை அருகே சிறுச்சேரியில் மஹாவீர் ஜெயின் என்ற 56 வயது நபர் தொழிலதிபதிராக இருந்து தற்போது தன் ஓய்வு காலத்தை தனது குடும்பத்துடனும், கால்நடைகளுடனும் விலங்குளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றார். 

தனது குடும்பத்துடன் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்ற மஹாவீர் ஜெயின் அப்பகுதியில் சுற்றித்திரிகின்ற தெரு நாய்களுக்கும் உணவு கொடுத்து வருகின்றார். இத்தகைய நிலையில், தெருநாய்களுக்கு உணவு கொடுத்துவிட்டு தன் நண்பருடன் வீட்டிற்கு செல்கின்ற வழியில் ராஜேஷ் என்பவர் தெரு நாய்களை கட்டையால் அடிப்பதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.
 
எனவே, மஹாவீர் ஜெயின் ராஜேஷை கண்டித்துள்ளார். உடனே அவரை ராஜேஷ், மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார். முதியவர் என்றும் பாராமல் கட்டையால் மஹாவீர் ஜெயினை தாக்கியுள்ளார். அப்போது தடுக்க வந்த நண்பரையும் அவர் பலமாக தாக்கியுள்ளார். 

இதன் காரணமாக அடிபட்டவர்கள் அனைவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மீட்டு அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து, மஹாவீர் ஜெயின் காவல் நிலையத்தில் புகாரளிக்க வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

old men attacked by violent fellow


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->