அக்னி தீர்த்த கடலில் மனைவிக்கு திதி கொடுக்கும் ஓ.பன்னீர்செல்வம்..! - Seithipunal
Seithipunal


இன்று காலை  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் மறைந்த தனது மனைவிக்கு திதி கொடுத்த பின்னர், கோவிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளிலும் தனது குடும்பத்தினருடன் புனித நீராடினார். 

பிறகு, மாலை 4 மணி அளவில் கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த பன்னீர்செல்வம் விஸ்வநாதர் சன்னதி எதிரே உள்ள பிரகாரத்தில் அமர்ந்து ருத்ராபிஷேக பூஜை மற்றும் 108 சங்காபிஷேக பூஜையிலும் கலந்து கொண்டனர்.

பின்னர், புனித நீர் வைக்கப்பட்டிருந்த கலசத்தை அவரும், அவரது மகனும் கையில் ஏந்தியபடி  கோவிலைச் சுற்றி வந்து சாமி தரிசம் செய்தனர். இதையடுத்து, கருவறையில் உள்ள சாமிக்கு புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மகா தீபாரதனை பூஜைகளும் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

O paneerselvam going to ramshvaram


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->