அப்படியா!!! பேருந்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...! - மகளிர் விடியல் பயண திட்டம்
number women traveling by bus increasing Women Dawn Travel Project
தமிழ்நாடு அரசு, பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை இலவசமாக பெண்களுக்கு செய்துகொடுத்து வருகிறது. அதில் மிக முக்கிய திட்டமாக, மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் 'பெண்கள் கட்டணமில்லா பயணம்' திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் 'மகளிர் விடியல் பயணம் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதில்,சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.மேலும்,மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3.65 கோடி முறை பெண்கள் நகரப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதத்தில 28-ந்தேதியில் மட்டும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 13.59 லட்சம் முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர்.
மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 23 % அதிகரித்துள்ளது.
English Summary
number women traveling by bus increasing Women Dawn Travel Project