ஒரே நாளில்.. ஒரே நேரத்தில்.. 40 மாவட்டங்களிலும்.. நாம் தமிழர் கட்சி செய்யப் போகும் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவரக் கோரி பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிவுத்தலின்படி மாநில முழுவதும் மாவட்ட நிர்வாகிகள் புது முயற்சி மேற்கொள்ள உள்ளனர்.

அதன்படி, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி நாம் தமிழர் மகளிர் பாசறை முன்னெடுக்கும் நாற்பது மாவட்டங்களிலும், ஒரே நாளில், ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிலை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதியளித்து, ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் மதுக்கடைகளின் எண்ணிக்கையை பன்மடங்காக உயர்த்தி, தெருவுக்குத் தெரு ஒரு குடிப்பகத்தைத் திறந்து வைத்து, ஆண்கள்-பெண்கள், சிறுவர்கள்-பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் மதுபோதைக்கு அடிமையாக மாற்றி கொடுஞ்சாதனை படைத்துள்ள ‘திராவிட மாடல்’ திமுக அரசிடம், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் பரப்புரைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, அதனை வருகின்ற 12-06-2023 அன்று நாற்பது மாவட்டங்களிலும், நாம் தமிழர் மகளிர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கும் போராட்டத்தை முன்னெடுக்கவிருக்கின்றனர்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெறும் இம்மாபெரும் போராட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK decision to appeal to district collector prohibition of alcohol


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->