கம்போடியா எல்லையில் உள்ள விஷ்ணு சிலையை இடித்து தள்ளிய தாய்லாந்து படையினரால் பதற்றம்..!
Thai soldiers demolished a Vishnu statue located on the Cambodian border
கம்போடியா - தாய்லாந்து இடையே எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த, 2013-இல் தனது பிரதேசமாக தாய்லாந்து கருதும் இடத்தில் கம்போடிய ராணுவம் 29 அடி உயரத்தில் பிரேவ் விஹார் பகுதியில் விஷ்ணு சிலை நிறுவியது.
இரு நாடுகளுமே புத்த மதத்தை பின்பற்றும் நிலையில், புத்தரின் அவதாரமாக ஹிந்து கடவுள் விஷ்ணுவைக் கருதுகின்றனர். இது தொடர்பான வழக்கில், 1962-இல் சர்வதேச நீதிமன்ற தீர்ப்பின் படி, இந்த சிலை உள்ள பகுதியை கம்போடியாவுக்கு சொந்தமானதாக அறிவித்தது. ஆனாலும், இந்த தீர்ப்பை தாய்லாந்து ஏற்க மறுத்து வருகிறது.
இந்நிலையில், 29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவத்தினர் இடித்து அகற்றியுள்ளதால், இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாய்லாந்து அரசு கூறுகையில் 'இது மதப் பிரச்னை அல்ல; எல்லை பிரச்சினை' என்று தெரிவித்துள்ளது. இந்த விஷ்ணு சிலை அறம் விவகாரம் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Thai soldiers demolished a Vishnu statue located on the Cambodian border