மின் கணக்கீட்டுப் பணியைத் தனியாரிடம் தாரைவார்ப்பதா? தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal



தமிழ்நாட்டில் மின்சார நுகர்வுக் கணக்கீட்டுப் பணிகளைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் தவெக அரசின் முடிவிற்குக் கடும் கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். மின்சாரம் என்பது வணிகப் பொருள் மட்டுமல்லாது மக்களின் அன்றாட வாழ்வோடு பிணைந்துள்ள அடிப்படைத் தேவை என்றும், அதனைத் தனியாரிடம் தாரைவார்ப்பது அரசின் நிர்வாகத் தோல்வி என்றும் அவர் சாடியுள்ளார்.

வேலைவாய்ப்புக் கொள்கையும் தனியார்மய ஆபத்தும்:

மின்வாரியத்தில் போதிய பணியாளர்கள் இல்லை என்றால், அரசு வேலைக்காக லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும் சூழலில், அக் காலிப் பணியிடங்களை ஏன் நிரந்தரமாக நிரப்பவில்லை எனச் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அனுபவமற்ற தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் கணக்கெடுக்கும் போது தவறான கணக்கீடுகளோ அல்லது காலதாமதமோ ஏற்பட்டால், அதனால் உயரும் மின் கட்டணப் சுமைக்கு யார் பொறுப்பேற்பது என்றும், நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு என்னவாகும் என்றும் அவர் வினவியுள்ளார். இன்றைக்கு மின் கணக்கீட்டுப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பவர்கள், நாளை ஒட்டுமொத்த மின்வாரியத்தையே தனியாரிடம் கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சீமானின் பிரதானக் கோரிக்கைகள்:

தமிழ்நாட்டில் உள்ள 3.5 கோடி குறைந்த மின்னழுத்த இணைப்புகளில் சுமார் 2.5 கோடி வீட்டு மின் இணைப்புகளாக உள்ளதால், கோடிக்கணக்கான மக்களுடன் நேரடித் தொடர்புடைய இப் பணியைத் தற்காலிக ஒப்பந்த முறையில் தனியாரிடம் விடுவது மிகமோசமான நிர்வாக நடவடிக்கையாகும். எனவே, மின் கணக்கீட்டுப் பணியைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், மின் கணக்கீட்டாளர் உள்ளிட்ட அனைத்துக் காலிப் பணியிடங்களையும் வெளிப்படையான தேர்வு முறையின் மூலம் தகுதியுடைய தமிழ்நாட்டு இளைஞர்களைக் கொண்டு நிரந்தரமாக நிரப்ப வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Chief Seeman Slams TVK Govt Over Privatization of Electricity Meter Reading Demands Permanent Recruitment


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->