இனி ஊபர் செயலி முதல் மெட்ரோ ரெயில் டிக்கெட் முன்பதிவு..சென்னையில் அறிமுகம்!
Now the metro rail ticket booking from the UOBAR app has been launched in Chennai
ஊபர் செயலியிலும் இனி சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு அடுத்து ஊபர் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் வசதியை பெறும் 2வது நகரம் சென்னை ஆகும்.
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற வற்றை இணைக்கும் வசதியும் மெட்ரோ வசதி செய்யப்பட்டுள்ளது.இதில் சுமார் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்தால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஊபர் செயலியிலும் இனி சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊபர் செயலி மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை 50 சதவீதம் சலுகை விலையில் மெட்ரோ டிக்கெட்டை பெறலாம் என்று சென்னையில் நடந்த அறிமுக விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது . க்கியூஆர் கோர்டை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் டிக்கெட்டை பெறலாம்.அதுமட்டுமல்லாமல் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லவும், திரும்பவும் பயணக்கட்டணத்திலும் 50சதவீதம் சலுகை சென்னையில் அறிவித்துள்ளது. ஆட்டோ, கார், டூ வீலர் முன்பதிவு செய்யும் ஊபர் செயலிலேயே மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தியா இருக்கிறது.டெல்லிக்கு அடுத்து ஊபர் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் வசதியை பெறும் 2வது நகரம் சென்னையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Now the metro rail ticket booking from the UOBAR app has been launched in Chennai