60 லட்சம் வரதட்சணை கொடுத்தும் தினமும் டார்ச்சர்: பெங்களூருவில் கர்ப்பிணி ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: தலைமறைவான கணவன் கைது; குடும்பத்தாரிடம் விசாரணை..! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் வரதட்சணை கொடுமையால் 27 வயதான கர்ப்பிணியான ஐ .டி பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்த்தியடைய வைத்துள்ளது. பெங்களூரு சுத்தகுண்டேபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் என்பவரின் மனைவி ஷில்பா. இருவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், ஷில்பா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.

பிரவீன்-ஷில்பா திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.50 லட்சம் மற்றும் இதர பொருட்கள் கொடுக்கப்பட்ட்டுள்ளது. திருமணம் முடிந்த ஓராண்டில் பிரவீன், தனது ஐ.டி வேலையை விட்டுவிட்டு, பானிபூரி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், தொழில் தொடங்க கூடுதல் பணம் வாங்கி வரும்படி அடிக்கடி ஷில்பாவிடம் பிரவீன் தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஷில்பாவும் தனது பெற்றோரிடம் பேசி மீண்டும் ரூ.10 லட்சத்தை பிரவீனுக்கு வாங்கி கொடுத்துள்ளார். அதற்கு பிறகும் கூடுதல் பணம் கேட்டு பிரவீனும் அவரது குடும்பத்தினரும் ஷில்பாவை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த மனைவி ஷில்பா, பிரவீனுடன் வாழ மறுத்து விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். பிரவீனின் குடும்பத்தினர் சில காலம் கழித்து வந்து, ஷில்பாவை சமாதானப்படுத்தி மீண்டும் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனாலும், சில காலங்களே ஆன நிலையில், மீண்டும் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ஷில்பா, நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உறைந்து போயுள்ளனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷில்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் குறித்த தற்கொலை சம்பவம் குறித்து ஷில்பாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பின்னர், கணவன் பிரவீன், அவரது தாய் சாந்தா, தங்கை பிரியா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பின்னர் தலைமறைவாக இருந்த பிரவீனை கைது செய்து அவரை சிறையில் அடைத்த்துள்ளனர். மாமியார், மாமனாரிடம் விசாரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pregnant IT employee commits suicide in Bengaluru due to dowry harassment


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->