தமிழகத்தில் 8 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப்போகும் அதீத கனமழை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 21ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வானது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு நிவர் என பெயர் வைத்துள்ளது. 

இந்த புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்குவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி, காரைக்கால்-மகாபலிபுரம் இடையே இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல் இன்றிரவு கரையை கடக்கும். புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால், புதுச்சேரி மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் அதிகன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nov 25 weather report in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->