சாம்பியன் பட்டம் வென்றார் நார்வே வீரர் கார்ல்சென்..குகேஷ் 3-வது இடம்!
Norwegian player Carlsen won the championship title Gukesh takes 3rd place
மாக்னஸ் கார்ல்சென் ஒரே கிராண்ட் செஸ் தொடரில் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளில் கைப்பற்றிய 6வது பட்டத்தை பெறும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெற்று வந்த ‘சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ்’ சர்வதேச செஸ் போட்டி, குரோஷியாவின் ஜாக்ரெப் நகரத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது. உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறந்த வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர், அவர்களில் இந்தியாவின் உலக சாம்பியன் குகேஷ் மற்றும் நார்வேவின் ‘நம்பர் ஒன்’ வீரர் மாக்னஸ் கார்ல்சென் ஆகியோரும் இடம்பெற்றனர்.
முதலில் நடந்த ரேபிட் பிரிவில், 14 புள்ளிகளுடன் குகேஷ் முதலிடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
குகேஷ் – 14 புள்ளி (1-வது இடம்)ஜான் கிர்சிஸ்டோப் டுடா (போலந்து) – 11 புள்ளி (2-வது இடம்)
மாக்னஸ் கார்ல்சென் – 10 புள்ளி (3-வது இடம்)
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் பிரிவில் (18 சுற்றுகள்), கார்ல்சென் தன் ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.
முதல் நாளில் குகேஷை வீழ்த்திய கார்ல்சென்,இரண்டாம் நாளில் குகேஷுடன் 14வது நகர்த்தலில் 'டிரா' ஆகினார்.இறுதிச் சுற்றில் குரோஷியாவின் இவான் சார்க்கை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார்.
மாக்னஸ் கார்ல்சென் – 12.5 புள்ளி,வெஸ்லி சோ (அமெரிக்கா) – 12 புள்ளி,நொடிர்பெக் அப்துசட்டோரோவ் (உஸ்பெகிஸ்தான்) – 12 புள்ளி
மொத்த புள்ளி நிலவரம் மற்றும் பரிசுத்தொகை:மாக்னஸ் கார்ல்சென் – 22.5 புள்ளி (சாம்பியன்) – ரூ.34 லட்சம்
வெஸ்லி சோ – 20 புள்ளி (2-வது இடம்) – ரூ.25.75 லட்சம்,டி.குகேஷ் – 19.5 புள்ளி (3-வது இடம்) – ரூ.21.5 லட்சம்
இந்த வெற்றியுடன், மாக்னஸ் கார்ல்சென் ஒரே கிராண்ட் செஸ் தொடரில் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளில் கைப்பற்றிய 6வது பட்டத்தை பெறும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
English Summary
Norwegian player Carlsen won the championship title Gukesh takes 3rd place