நார்வே செஸ்: பட்டத்தை இழந்த குகேஷ்! மேஜையில் தலையை சாய்த்து மனம் உடைந்த தருணம்!
Norway Chess Gukesh loss the final video
நார்வே கிளாசிக்கல் செஸ் தொடரின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் இளைய உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்காவின் கிராண்ட்மாஸ்டர் பேபியானோ கருனாவிடம் தோல்வியடைந்தார்.
இந்த தோல்வியால், கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை அவர் பறிகொடுத்தார். புள்ளிகளுக்கான கடைசி ஆட்டத்திலேயே வாய்ப்பு சரிந்ததை உணர்ந்த குகேஷ், மேஜை மீது தலையை சாய்த்து வாடினார்.
ஸ்டாவாங்கரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6 முன்னணி வீரர்கள் இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் போட்டியிட்டனர். குகேஷ் 14.5 புள்ளிகளுடன் இறுதிச் சுற்றை எதிர்நோக்கிய நிலையில், கருப்பு காய்களுடன் கருனாவை எதிர்கொண்டார்.
ஆனால் தொடக்கத்திலிருந்தே கருனா ஆதிக்கம் செலுத்த, குகேஷ் மீட்டெடுக்கும் முயற்சியில் கடைசி கட்டத்தில் ஒரு தவறான நகர்வால் வெற்றியை இழந்தார்.
இதே தொடரின் மற்றொரு முக்கிய ஆட்டத்தில், மேக்னஸ் கார்ல்சன் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசியை தோற்கடித்து 7-வது முறையாக நார்வே கிளாசிக்கல் பட்டத்தை கைப்பற்றினார்.
இறுதியில், ஒரே புள்ளிகள் (14.5) இருந்தும் டைப்ரேக்கர் அடிப்படையில் குகேஷ் மூன்றாம் இடத்தில் தள்ளப்பட்டார்.
English Summary
Norway Chess Gukesh loss the final video