கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம்.. எங்க கூட்டணியில் இபிஎஸ்.. பங்காளி மோதல்.. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது,  "234 தொகுதிகளிலும் செயல்பட கட்சி அமைப்பை தீவிரமாக மெருகேற்றிக் கொண்டு வருகிறோம். மதுரை உள்ளிட்ட இடங்களில் அமமுகவோ அல்லது கூட்டணி கட்சியோ போட்டியிட்டாலும், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர சக்திகளை ஒன்றிணைக்கப் பணியாற்றுகிறோம்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீதான மக்களின் நம்பிக்கை போய்விட்டது. மதுரையில் முதல்வர் வந்ததால் எது நடந்தது? வெறும் சாக்கடை மூடல், வண்டவாளம் ஏறும் நாடகம் மட்டுமே! பாஜக தமிழர்களுக்கு எதிரானது என திமுக மேற்கொள்கிற பிரச்சாரம் பொய்யானது.

2026 தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும். ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக கூட்டணியில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள், உரிமை மீட்பு குழு அவருக்குப் பின்னால்தான் இருக்கின்றனர். தேர்தல் நேரத்தில் அவரது பங்கு வெளிச்சமாகத் தெரியும்.

அதிமுக என்பது ஜெயலலிதாவின் கட்சி. அவரை நம்பும் தொண்டர்கள் எங்கு இருந்தாலும் ஒரே நோக்கில் செயல்பட்டால், திமுக ஆட்சியை வீழ்த்த முடியும். திமுக கூட்டணி மக்கள் ஆதரவை இழந்து வருகிறது. ஆர்கே நகரில் நடந்தது 2026-ல் மாநிலமெங்கும் நிகழும்.

எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் உறுதியாக இணையப் போகின்றன. திமுக கூட்டணிக்கு தோல்வி உறுதி. அதிமுக கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை; எடப்பாடி பழனிசாமியே எங்கள் கூட்டணிக்கு வந்திருக்கிறார்.

பொது எதிரியான திமுகவை வீழ்த்த, பங்காளி மோதல்களை பக்கவாட்டில் வைக்க வேண்டும்," என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK TTV Dhinakaran ADMK BJP OPS


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->