புயல் சின்னம்: தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!
Northeast monsoon IMD Rain fisherman
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று, மாநிலம் முழுவதும் மழை தீவிரமடைந்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிக கன மழையும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதே சமயம், தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் நகர்வால் கடலோர மாவட்டங்களில் வானிலை மாறுபாடு அதிகரிக்கும் எனவும், கடல் பரப்பில் அலைச்சல் மற்றும் சூறைக்காற்று உருவாகும் அபாயம் உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்புக்காக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கடுமையான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்கள் இன்றுக்குள் கரைக்கு திரும்பி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Northeast monsoon IMD Rain fisherman