#ஈரோடு : ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணம்.! வடமாநிலத்தவர்கள் மீது வழக்கு.!  - Seithipunal
Seithipunal


டிக்கெட் எடுக்காமல் முன் பதிவு செய்யக்கூடிய பெட்டியில் பயணம் செய்த வட மாநிலத்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

வட மாநிலத்தைச் சேர்ந்த பல ரயில் பயணிகளும் பதிவு செய்ய வேண்டிய இருக்கைகளில் டிக்கெட் கூட எடுக்காமல் வந்து அமர்ந்து கொள்வது பொதுவாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். இது பற்றி பலமுறை புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இந்த பிரச்சனை தீர்ந்த பாடில்லை. 

அந்த வகையில் தற்போதும் அதுபோல எந்தவித டிக்கெட்டும் எடுக்காமல் அவர்கள் முன்பதிவு செய்யக்கூடிய இருக்கைகளில் பயணித்துள்ள சம்பவம் ஈரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து சக பயணி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வேக்கு புகார் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் முன்பதிவு செய்யாமல் ரயிலில் பயணம் செய்த வட மாநிலத்தவர்களின் காட்சிகளை அவர் பதிவு செய்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, ஐந்து முன்பதிவு செய்யக்கூடிய பெட்டிகளில் பயணித்த 50க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் புகார் அளிக்கப்பட்ட போதும் அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நிம்மதி அளிப்பதாக இருப்பதாக புகார் அளித்த பயணி பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Indian no ticket in reserve trains


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->