தவெகவுக்குப் பட்டாசு வேண்டாம்.. தொண்டர்களுக்கு தலைமை அறிவுறுத்தல்! - Seithipunal
Seithipunal


தேர்தல் பரப்புரையில் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சி தலைமையின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் பரப்புரையிலும், பொதுக்கூட்டங்களிலும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது என கட்சித் தலைமையினரால் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் அனுப்பிய அறிவுறுத்தலில் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெறும் நிலையில், கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
 கட்சி அனுமதிக்காத வாசகங்கள், புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள், பேனர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கட்சி தலைமையால் அங்கீகரிக்கப்படாத டிசைன்கள் மற்றும் இலச்சினைகள் எதையும் பயன்படுத்துவதற்கு தடை. பரப்புரை மற்றும் நிகழ்ச்சிகளின் போது பட்டாசு வெடித்தல் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படக்கூடாது; கட்சித் தொண்டர்கள் பொதுமக்களின் தோழனாக செயல்பட வேண்டும் என்று மேற்படி நெறிமுறைகளை மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச்செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No firecracker for the protest Leadership instruction for the volunteers


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->