கடலூர் : என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் கால்வாய் அமைக்கும் பணி என்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் இரண்டாவது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக மேல் வளையமாதேவி பகுதியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு நெற்பயிர்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கியது. 

இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. அதன்படி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேல் வளையமாதேவி கிராமத்தில் கால்வாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வந்த நிலையில், இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தின் காரணமாக நெய்வேலியில் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாமக போராட்டத்துக்கு போலீசார் பாதுகாப்புக்கு செல்வதால் கால்வாய் அமைக்கும் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால் இன்று கால்வாய் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NLC work today stop due to security problem


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->