என்.எல்.சிக்கு ரூ.5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் என்.எல்.சி அனல் மின் நிலையமானது செயல்பட்டு வருகிறது. இங்கு பாய்லர் வெடி விபத்து மற்றும் பிற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

மேலும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், இந்த சோகங்கள் சரியான பராமரிப்பின்மை காரணமாக ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட ஏற்பட்ட வெடிவிபத்தில், தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த மாதத்தின் போது நான்கு பேர் உயிரிழந்திருந்தனர், பலரும் படுகாயம் அடைந்திருந்தனர்.

இதனைப் போன்று இங்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மற்றும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை என விபத்துக்கள் தொடர்கதையாகி 20 க்கும் மேற்பட்டோர், 10க்கும் மேற்பட்டோர் பலியாவது தொடர்கதையாகி உள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்துக்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC fine announced by National Green Tribunal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->