காதுகளில் இருந்து வழிந்த இரத்தம்.. துடிதுடித்து உயிரிழந்த யானை.. துதிக்கையை பிடித்து கதறியழுத வனத்துறை அதிகாரி.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி பகுதியில் காது கிழிந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆண் யானை நடமாடி வந்துள்ளது. கடந்த 28 ஆம் தேதி கும்கி யானைகளின் உதவியோடு யானைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், முதுகில் இருந்த காயத்திற்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதன் பின்னர், யானை குடியிருப்பு பகுதிக்கு வருவதும், சாலையில் இருப்பதையும் வழக்கமாக வைத்து இருந்துள்ளது. அந்த யானையின் காதில் தீப்பந்தம் கொண்டு தீ வைத்ததாக தெரிய வருகிறது. இதனால் யானையின் இடது காதில் பலத்த காயம் ஏற்படவே, காதின் ஒரு பகுதி அழுகி விழுந்துள்ளது. 

இதனையடுத்து இரண்டு நாட்களாக கடும் இரத்தப்போக்கு ஏற்பட்டு அவதியுற்ற யானைக்கு யானைக்கு உடனடியாக சிகிச்சையளித்த நிலையில், யானை தொடர்ந்து சோர்வுடன் காணப்பட்டுள்ளது. யானையின் நிலையை கண்டு கவலையுற்ற வாந்துறை அதிகாரிகள், முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். 

இதற்காக விஜய், கிருஷ்ணா, கிரி, வாசிம் ஆகிய 4 கும்கி யானைகள் உதவியுடன், கால்நடை மருத்துவர்கள் மயக்க மருந்து செலுத்த, யானை சில நிமிடங்களுக்குள்ளாகவே மயங்கியது. பின்னர் கும்கிகளின் உதவியுடன் யானையை இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். 

இந்நிலையில், யானை தோப்புக்காடு முகாம் வாசலில் வைத்து பரிதாபமாக உயிரிழந்தது. பல முயற்சிகள் செய்தும் யானையை காப்பாற்ற முடியாத நிலையில், வனத்துறை அதிகாரிகள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். மேலும், வனத்துறை அதிகாரி ஒருவர், யானையின் தும்பிக்கையை பிடித்து கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

யானையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், யானையின் காதுகளில் தீ வைத்து கொளுத்தப்பட்டதால், படுகாயம் ஏற்பட்டு துடிதுடித்து யானை உயிரிழந்தது அம்பலமாகியுள்ளது. மேலும், இதுதொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கையில், ஈவிரக்கமில்லாமல் யானையின் காதுகளில் யாரோ தீ வைத்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, கொடூரர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை போன்று சிறு உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது " என்று தெரிவித்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nilgiris Elephant Died Forest Officer Cried


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->