#JustIn: சிவகங்கையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை..! - Seithipunal
Seithipunal


சிவகங்கையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சார்ந்த நபரின் சகோதரர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியை சார்ந்தவர் காளிதாஸ். இவர் கடந்த 2008 ஆம் வருடத்தில், மாவோயிஸ்ட் இயக்கத்துடன் இணைந்து பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்ட திட்டமிட்டு, கொடைக்கானல் மலைப்பகுதியில் பயிற்சியெடுத்த வழக்கில், கோவையில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

காளிதாஸ் தற்போது கேரளாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் மீது கேரள மாநிலத்தில் 6 வழக்குகள் உட்பட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவரது சகோதரர் சிங்காரம் சிவகங்கை மாவட்டம் அண்ணாமலை நகரில் வசித்து வருகிறார். 

கோப்புப்படம்: மாவோயிஸ்ட் காளிதாஸ் 

இன்று காலை என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள், மாவோயிஸ்ட் காளிதாஸின் சகோதரரான சிங்காரத்தின் இல்லத்தில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சிங்காரம் தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவரிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், சிங்காரம் தனது சகோதரருடன் சேர்ந்து சதிச்செயலில் ஈடுபட முயற்சித்தாரா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NIA Officers Raid at Sivaganga Maoist Kalidas Brothers House


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->