நெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடித்து விபத்து..ரூ.30 இலட்சம் நிவாரணம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பாய்லர் வடித்து பலியான நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.30 இலட்சம் இழப்பீடு வழங்குவதாக என்.எல்.சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

என்.எல்.சி பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் நேற்று 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியது. 

மேலும், இந்த விபத்து அடுத்தடுத்து தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கூறி பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை வைத்தது. என்.எல்.சி நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததை தொடர்ந்து, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்குவதாக அறிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு ரூ.5 இலட்சம் நிதிஉதவி வழங்குவதாகவும் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neyveli NLC Plant Boiler Blast Relief fund


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal