புதிய நீர் உந்து நிலையம்..பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த MLA!  - Seithipunal
Seithipunal


வில்லியனூர் அன்னை நகரில்ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் நீர் உந்து நிலையம்எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இயக்கி வைத்தார் !

வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக அன்னை நகர் முதல் குறுக்குத் வீதியில் புதிய குடிநீர் உந்து நிலையம் மற்றும் அதனை சார்ந்த பணிகள் 23 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய நீர் உந்து நிலையத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை பொதுசுகாதாரக் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் வாசு, உதவிப் பொறியாளர் பீளாராணி, இளநிலைப் பொறியாளர் திருவேங்கடம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் குணசீலன், பாபு, செந்தில், காளிதாஸ், ஷர்மா, குமரவேல், முருகன், ஜெயக்குமார், சுதா, கணேஷ், கருணாகரன், பெருமாள், ரஞ்சித் குமார், முருகன், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், தொமுச தலைவர் அங்காளன், விவசாய அணி துணை அமைப்பாளர் கோபி, காசிநாதன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஏழுமலை, கிளைக் கழக நிர்வாகிகள் சுரேஷ், சரவணன், கார்த்திகேயன், கோவிந்தராஜ், ரகு, பாலு, ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New water supply station MLA opened it for public use


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->