குழந்தைகளை தாக்கும் புதிய வகை வைரஸ்.. புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் வேகமாகப் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த பத்து நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனையில், அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதில், 50 சதவீதம் நபர்கள் சிறுவர்களாக இருக்கின்றனர். எனவே, தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது.

பள்ளிகளில் குழந்தைகள் அருகருகில் இருக்கும் சூழலால் காய்ச்சல் பாதிப்பு உள்ளான குழந்தைகளிடமிருந்து மற்ற குழந்தைகளுக்கு வேகமாக பரவ வாய்ப்பு அதிகமிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை வழங்க சுகாதாரத்துறை பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று புதுச்சேரி அரசு இன்று முதல் செப்.25ம் தேதி வரை விடுமுறை என அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New virus spread in childrens pondicherry school holiday


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->