தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில்‌ நாளுக்கு நாள்‌ அதிகரித்து வரும்‌ கொரோனா நோய்ப்‌ பரவலைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, நோய்ப்‌ பரவலைத்‌ தடுக்க மத்திய அரசின்‌ உள்‌ துறை அமைச்சகம்‌ மற்றும்‌ சுகாதாரம்‌ மறறும்‌ குடும்பல நலத்துறை அமைச்சகம்‌ பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில்‌ கொண்டும்‌, தமிழ்நாட்டில்‌ நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளை மேலும்‌ தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின்‌ அடிப்படையில்‌, 06.05.2021 (இன்று) காலை 4.00 மணி முதல்‌ 20.05.2021 காலை 4.00 மணி வரை பின்வரும்‌ புதிய கட்டுப்பாடுகள்‌ விதிக்கப்படுகின்றன.

புதிய கட்டுப்பாடுகள்‌ :

அனைத்து அரசு அலுவலகங்களும்‌, தனியார்‌ அலுவலகங்களும்‌, அதிகபட்சம்‌ 50 விழுக்காடு பணியாளர்களுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது.

பயணியர்‌ இரயில்‌, மெட்ரோ இரயில்‌, தனியார்‌ பேருந்துகள்‌, அரசு பேருந்துகள்‌ மற்றும்‌ வாடகை டாக்ஸி ஆகியவற்றில்‌ 50 விழுக்காடு இருக்கைகளில்‌ மட்டும்‌ பொது மக்கள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

3000 சதுர அடி மற்றும்‌ அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய வணிக வளாகங்கள்‌ இயங்க 26.4.2021 முதல்‌ ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிக வளாகங்களில்‌ இயங்கும்‌ பலசரக்கு கடைகள்‌ மற்றும்‌ காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌ மற்றும்‌ காய்கறிகள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ மட்டும்‌ குளிர்சாதன வசதி இன்றி நண்பகல்‌ 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

இவற்றில்‌, ஒரே சமயத்தில்‌ 50 சதவிகிதம்‌ வாடிக்கையாளர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்‌. மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும்‌ காய்கறிக்‌ கடைகள்‌ தவிர, இதர கடைகள்‌ அனைத்தும்‌ திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள்‌, பால்‌ விநியோகம்‌ போன்ற அத்தியாவசியப்‌ பணிகள்‌ வழக்கம்‌ போல எந்தத்‌ தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து உணவகங்களிலும்‌ பார்சல்‌ சேவை வழங்க மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌. தேநீர்‌ கடைகள்‌ நண்பகல்‌ 12 மணி வரை மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. உணவகங்கள்‌ மற்றும்‌ தேநீர்கடைகளில்‌ உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில்‌ தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள்‌ தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்‌. உணவுக்‌ கூடங்களில்‌ அமாந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

உள்‌ அரங்கங்கள்‌ மற்றும்‌ திறந்த வெளியில்‌, சமுதாயம்‌, அரசியல்‌, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள்‌ மற்றும்‌ இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது. திரையரங்குகள்‌ செயல்படாது.

ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில்‌, 25 நபர்களுக்கு மிகாமல்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்‌, தற்போது இறுதி ஊர்வலங்கள்‌ மற்றும்‌ அதைச்‌ சார்ந்த சடங்குகளில்‌ 20 நபர்களுக்கு மேல்‌ அனுமதி இல்லை.

ஏற்கனவே, மாநகராட்சி மற்றும்‌ நகராட்சி பகுதிகளில்‌ அழகு நிலையங்கள்‌,  இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, தற்போது ஊரகப்‌ பகுதிகளில்‌ உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும்‌, அழகு நிலையங்கள்‌, இயங்க தடை விதிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new restrictions in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->