பாதுகாப்பு கேட்ட காதல் தம்பதியினர்: பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பாதுகாப்பு கேட்ட காதல் தம்பதியினர்: பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் - நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தில், சாதிமறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பிலாத்து கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணுபிரியா என்பவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அஜீத்குமார் என்ற இளைஞரும் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்த தம்பதியினர் தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டதை அடுத்து நேற்று திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருதரப்பு பெற்றோர்களையும் வரவைழைத்தனர்.

அதன் படி அங்கு வந்த பெண்ணின் பெற்றோர்கள், பெண்ணுக்கு மனரீதியான பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்டு போலீசார் மணமகனிடம் இருந்து பெண்ணை பிரித்து பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

சட்டப்படி திருமண வயதை அடைந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு முறையிட்டால் அவர்கள் சேர்ந்து வாழவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுததுவது தான் காவல்துறையின் கடமை. ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இருப்பினும், இதனை வழக்காகப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கலாம்.

ஆனால் அவர்கள் அதையும் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல், காவல் துறையினருக்கு நீதிமன்ற உத்தரவு ஏதும் பெறாமல் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. ஆகவே, இந்த சம்பவத்தில் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியரும் தலையிட்டு இந்தத் தம்பதியினர் இணைந்து வாழ்வதற்கு சட்டப்படியான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new married couple went asked protection to police in dindukal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->