நெல்லை வந்தே பாரத் ரெயில் பயணிகள் கவனிக்கவும்! -புதிய நேரம் அறிவிப்பு வெளியீடு! - Seithipunal
Seithipunal


சென்னை -நெல்லை இடையிலான அதிவேக ரெயிலாக வந்தே பாரத், கடந்த 2023 செப்டம்பரில் அறிமுகமாகி பயணிகளிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும், வாரத்தில் செவ்வாய்கிழமை தவிர்த்து, தினமும் காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

அதன் பிறகு, மதியம் 2.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்குள் நெல்லையை சென்றடைகிறது. இதன் ஆரம்பத்தில் 8 பெட்டிகளுடன் ஓடிய இந்த அதிவேக ரெயில், பெரும் பயணிகள் ஆதரவால் தற்போது 20 பெட்டிகளுடன் பறக்கிறது.

மேலும், கோவில்பட்டியில் கூடுதல் நிறுத்தமும் வழங்கப்பட்டுள்ளது.அண்மையில் மாற்றமாக, டிசம்பர் 7 முதல் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் காலை 6.05 மணிக்கு பதிலாக 5 நிமிடம் முன்னதாக, அதாவது 6.00 மணிக்கே புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகள் நேரத்தை கவனத்தில் கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nellai Vande Bharat Railway passengers pay attention New time announcement released


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->