உயிரைப் பணயம் வைத்து.. படியில் பயணம்.. அரசு பேருந்தால், மாணவிகளின் அவலநிலை.!  - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் இலவச அரசு பேருந்துகளில் மாணவிகள் பேருந்தில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

தமிழகத்தில் பல வருடங்களாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்கின்ற நேரத்திற்கு அதிகப்படியான அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. பல மாவட்டங்களில் இந்த நேரங்களில் வரும் பேருந்துகள் போதுமானதாக இருப்பது கிடையாது.

இதனால், அந்த நேரத்திற்கு வரும் ஒரே பஸ்ஸில் அவசரமாக காலையில் செல்லும் பள்ளி, கல்லூரி, அலுவலக வேலையாட்கள் அனைவருமே அடித்துப் பிடித்து நெறித்துக் கொண்டு அந்த ஒரே பேருந்தில் பயணம் செய்யும் நிலை இருக்கின்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் குறைவான அரசு பேருந்துகளால் பள்ளி கல்லூரி மாணவிகள் பலரும் நெறித்து பிடித்தபடி ஆபத்தான நிலையில் படியில் பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

ராணி அண்ணா கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவிகள் பலரும் பேருந்து வசதி இல்லாத காரணத்தால் உயிரை பணயம் வைத்து படியில் தொங்கியபடி பள்ளி கல்லூரிகளுக்கு செல்கின்றார்கள். இதுபோல அரசின் கட்டணம் இல்லா சாதாரண பேருந்துகள் இந்த நேரத்தில் அதிகப்படியாக விட்டால் இப்படி ஆபத்தான நிலையில் அவர்கள் பயணம் செய்ய வேண்டியதில்லை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai students travel in Govt Through steps


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->