புதிதாக திறக்கப்பட்ட ராஜீவ் காந்தி அரசு பேருந்து நிலையத்தில் நேரு MLA திடீர் ஆய்வு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் புதிதாக திறக்கப்பட்ட ராஜீவ் காந்தி அரசு பேருந்து நிலையத்தை உருளையன்பேட்டை  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் G.நேரு(எ)குப்புசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட  மறைமலை அடிகள் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜீவ் காந்தி அரசு பேருந்து நிலையத்தை  கடந்த 02.05.2025 ஆம் தேதி மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அவர்களும், புதுச்சேரி மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அவர்களும்  மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

மேலும் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா, அங்கு வந்து செல்லும் பொது மக்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா, பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் சரியான முறையில்  உள்ளதா, பேருந்து நிலையத்திற்கு  வந்து செல்லும் பயணிகளுக்கு சரியான முறையில் குடிநீர் கிடைக்கிறதா மற்றும்   பேருந்துகள் ஆட்டோக்கள் மற்றும் டெம்போக்கள் நிறுத்துவதற்கு போதுமான இடங்கள் உள்ளதா எனவும் மேலும் பொது மக்களுக்கு வசதியாக உள்ளதா என உருளையன்பேட்டை  தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத்  திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் 05.05.2025  இன்று ஆய்வு மேற்கொண்டார்.

 ஆய்வின்போது புதுச்சேரி நகராட்சி ஆணையர் திரு.கந்தசாமி,காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வம், உருளையன்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன்  மற்றும் காவல்துறை அதிகாரிகளும் நகராட்சி அதிகாரிகளும் மேலும் அப்பகுதியை சேர்ந்த புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள், நிர்வாகிகள்  பலர் உடன் இருந்தனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nehru MLA inspects newly opened Rajiv Gandhi Government Bus Stand


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->