பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடக்கம் - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.!!
engineering application start coming 7
தமிழகம் மற்றும் புதுவையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே மாணவர்கள் மேல்படிப்புகளுக்காக விண்ணப்பிக்க தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர நாளை மறுநாள் அதாவது, மே 7ம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கவுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், 07-05-2025 அன்று காலை 10 மணிக்கு விண்ணப்பப் பதிவைத் தொடங்கி வைக்க உள்ளார். ஆன்லைன் மூலமாக (https://www.tneaonline.org.) மட்டுமே மாணவர்கள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
engineering application start coming 7