நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட போராட்டம்! அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றம் ஏற்கனவே நிறைவேற்றிய "நீட் விலக்கு" மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் மத்திய அரசு தாமதித்து வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த தீர்மானத்தின் அடிப்படையில், "நீட்" தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்க, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

அந்தவகையில், ஜூலை 2023-ல் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தீவிரமாக நடத்தவும், தேவையெனில் புதிய வழக்கையும் தொடரவும், சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து செயல்படவும் முடிவானது.

இதற்குப் பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளும், "நீட்" தேர்வு மூலம் தமிழக மாணவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள், தவறுகள் குறித்து விவாதித்தனர். தமிழக அரசு எடுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு வழங்குவதாக உறுதி அளித்தனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிநடத்திய முந்தைய வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதை மேற்கோளாக காட்டி, இம்முறையும் வெற்றி நிச்சயம் எனக் குறிப்பிட்டனர். முடிவில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Neet exam All Party Meeting resolution passed 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->