நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
NEET 2025 result ban chennai hc order
மின் தடை காரணமாக நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி, 2024 மே 4ம் தேதி நடைபெற்ற இளங்கலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் ஆவடி பகுதியில் உள்ள ஒரு தேர்வுமையத்தில் கனமழை காரணமாக 1.15 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழைநீர் வகுப்பறைக்குள் புகுந்ததால், மாணவர்கள் பதில்களைக் குறிக்க ஒதுக்கப்பட்ட நேரத்தை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
இதனால் பெரும் மன அழுத்தத்தில் தேர்வு எழுத நேரிட்டதாகவும், இது மாணவர்களின் மதிப்பெண்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மீண்டும் ஒரு மறு தேர்வுக்கான வாய்ப்பு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட 13 மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களின் பிரச்சனை மீது பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து, மத்திய அரசு, தேசிய தேர்வுகள் முகமை ஆகியோரிடம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
English Summary
NEET 2025 result ban chennai hc order