தலைமையாசிரியரின் தண்டனையால் உயிரிழந்த மாணவன்.!
near vellure school student died for headmaster punishment
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் ஒன்பதாம் வகுப்புக்கு ஆசிரியர் யாரும் வராததால் மாணவர்கள் அனைவரும் சத்தமாக பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களை கண்டித்துள்ளார். இதையடுத்து, சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்த மாணவர்களை, பள்ளியின் மைதானத்தை சுற்றி நான்கு முறை ஓடி வரும்படி உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் படி மாணவர்கள் பள்ளி மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தனர். அதில் மோகன்ராஜ் என்ற மாணவன் ஓடும்போது, திடீரென சுருண்டு விழுந்தார். அந்த மாணவரை உடனடியாக மீது அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனே மாணவனின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near vellure school student died for headmaster punishment